தமிழ்நாடு

திருப்போரூர் அருகே மேலும் ஒரு வெடிபொருள் சிக்கியது..!

திருப்போரூர் அருகே மேலும் ஒரு வெடிபொருள் சிக்கியது..!

Rasus

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் அருகே மர்மப் பொருள் வெடித்த இடத்தில் மேலும் ஒரு வெடிபொருள் சிக்கியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் அடுத்த மானாமதி ஊராட்சியில் கங்கை அம்மன் கோயில் குளம் ஒன்று உள்ளது. அந்த குளத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. நேற்று விடுமுறை என்பதனால் அந்த ஊராட்சி சார்ந்த ஐந்து இளைஞர்கள் கோயில் குளத்துக்குள் சென்றிருக்கிறார்கள். அப்போது நகைப்பெட்டி மாதிரியான அளவில் ஒரு பெட்டி ஒன்று கிடைத்துள்ளது. அதனை கையில் எடுத்து பார்த்தபோது அந்த மர்மப் பொருள் வெடித்து சிதறியதில் இரண்டு பேர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனையடுத்து மோப்ப நாய்கள் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வெடித்த பொருளின் தன்மை குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், திருப்போரூர் அருகே மர்மப் பொருள் வெடித்த இடத்தில் மேலும் ஒரு வெடிபொருள் சிக்கியுள்ளது. மானாம்பதியிலுள்ள குளத்தின் கரையின் கண்டெடுக்கப்பட்ட வெடிபொருளை கைப்பற்றி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன் குளக்கரையில் மேலும் இதுபோன்ற வெடிபொருள் இருக்கின்றனவா என்பது குறித்தும் போலீசார் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.