small industries
small industries pt desk
தமிழ்நாடு

மத்திய பட்ஜெட்: மதுரை சிறு, குறு தொழில் முனைவோர்களின் நீண்ட நாள் கோரிக்கைகள் என்ன?

webteam

இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில், மதுரை மாவட்டத்தை சேர்ந்த சிறு, குறு தொழில் முனைவோர்களின் நீண்ட நாள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்திருந்தது. அவர்களின் எதிர்பார்ப்புகள் என்ன? இதுதொடர்பாக மடிசியா தலைவர் லட்சுமி நாராயணன் புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது...

இடைக்கால பட்ஜெட் 2024-2025

“பெரிய நிறுவனங்களில் முதலீடு செய்வதை விட எம்.எஸ்.எம்.இ-யில் சிறிய முதலீடுகள் அதிக வேலை வாய்ப்பை அளிக்கும் என்பதை சுட்டிக்காட்டி எம்.எஸ்.எம்.இ.,க்கு தனி நல வாரியம் அமைக்க வேண்டும், NPA ஆன நிறுவனங்களை மீட்டெடுப்பதற்காக பொது மன்னிப்பு திட்டம் அறிவிக்க வேண்டும்.

வரி விதிப்பு எளிமைப்படுத்தல், முதலீடு செய்தல், அதிக வருவாய், வேலை அளிக்கும் இந்திய தொடக்க, எம்.எஸ்.எம்.இ. நிறுவனங்களுக்கு ஊக்கத் தொகை வழங்குதல், தொழில் வணிக ஒப்புதல் அனுமதி ஒழுங்குபடுத்துதல், புதிய தொழில் நுட்பங்கள் ஏற்றுக் கொள்வது, தொழில் வணிக வளர்ச்சி நிதி பெறுதல் குறித்து பட்ஜெட்டில் கவனம் செலுத்த வேண்டும்.

இடைக்கால பட்ஜெட்

அதேபோல் மூலப்பொருட்கள் விலையை கட்டுப்படுத்த எம்.எஸ்.எம்.இ.,க்கு 18 சதவீத ஜி.எஸ்.டி.,யை 12 சதவீதமாக குறைக்க வேண்டும். ஆத்ம நிர்பார் ஸ்வஸ்த பாரத் யோஜனா திட்டத்தில் முழு நிதியுதவி அளிக்க வேண்டும். சுகாதாரம் மற்றும் பாதுகாப்புத் துறையில் கவனம் செலுத்த, எதிர்கால நெருக்கடியை சமாளிக்க பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும்.

எம்.எஸ்.எம்.இ எஸ்.எம்.இ துறைகளுக்கு வங்கிக் கடன் வழங்கும் அரசு திட்டம், காப்பீடு சலுகைகள் இந்த ஆண்டு நீட்டிக்கப்படுவதோடு உள்கட்டமைப்பு, வேலை வாய்ப்புகளுக்கான திட்டங்களும் தொடர வழிவகுக்க வேண்டும். வீடு, ரியல் எஸ்டேட் தொழில் முன்னேற, பணப்புழக்கம் அதிகரிக்க நிதி அமைப்பை வலுப்படுத்த வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார்.