தமிழ்நாடு

குழந்தைகளுடன் சென்று பார்க்க வேண்டிய கண்காட்சி..!

குழந்தைகளுடன் சென்று பார்க்க வேண்டிய கண்காட்சி..!

Rasus

பொங்கல் என்றாலே அதனுடன் சேர்த்து நினைவுக்கு வருவது சென்னை தீவுத்திடலில் நடக்கும் இந்திய சுற்றுலா மற்றும் தொழிற்பொருட்காட்சியும் தான். பொழுதுபோக்கு  அம்சங்களுடன் தமிழ்நாடு அரசு துறைகளின் நலத்திட்டங்களையும், வளர்ச்சி பணிகளையும் பொதுமக்கள் அறிந்துகொள்ள வாய்ப்பளிப்பதே இந்த பொருட்காட்சியின் நோக்கம்.

இந்த ஆண்டு தமிழக காவல்துறையின் சார்பாக ஒரு அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. வாய்ப்புள்ளவர்கள் குழந்தைகளை அழைத்துச் சென்று காண்பிக்கலாம்.

காவல்துறை அரங்கின் முக்கிய அம்சங்கள் :-

தமிழக காவல்துறை தொடர்பான புகைப்பட கண்காட்சி 

வங்கி பரிவர்த்தனை மோசடிகளிலிருந்து தப்பிப்பது எப்படி என்பதை விளக்கும் பகுதி .

பேசும் எலும்பு கூடு அறிவியல் நுட்பங்களை விளக்குதல் 

பல்வேறு வகையான துப்பாக்கிகள். அவற்றை தொட்டு பார்க்கும் வாய்ப்பு .

பல்வேறு வகையான சிசிடிவி கேமிராக்கள் .

குழந்தைகளுக்கு விளையாட்டு பகுதி

இந்த பொருட்காட்சியில் 28 மாநில அரசு துறைகள், 16 மாநில பொதுத்துறை நிறுவனங்கள், 2 மத்திய அரசு நிறுவனங்கள், 4 பிற மாநில அரசு நிறுவனங்கள், இந்திய செஞ்சிலுவை சங்கம், தமிழ்நாடு சட்ட உதவி மையம்  மற்றும்  60  தனியார் அரங்குகள் இடம்பெற்றுள்ளன.

தீவுத்திடலில் தொடங்கியுள்ள சுற்றுலா பொருட்காட்சியை பொதுமக்கள் இன்று முதல் கண்டுகளிக்கலாம். தொடர்ந்து 70 நாட்கள் நடைபெறும்.  பொருட்காட்சியில் மொத்தம் 52 அரங்குகள் உள்ளன. அலுவலக நாட்களில் மாலை 3 மணியில் இருந்து இரவு 10 மணி வரையும், விடுமுறை  நாட்களில் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை பொருட்காட்சியை பார்க்க முடியும். நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.35-ம்,  சிறுவர்களுக்கு ரூ.20ம் வசூலிக்கப்படுகிறது. 120 தனியார் கடைகளும் இடம் பெற்றுள்ளன.