தமிழ்நாடு

நீட் தேர்வு குறித்த தமிழகத்தின் கோரிக்கை பரிசீலிக்கப்படும்.. பிரகாஷ் ஜவடேகர்

நீட் தேர்வு குறித்த தமிழகத்தின் கோரிக்கை பரிசீலிக்கப்படும்.. பிரகாஷ் ஜவடேகர்

Rasus

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிப்பது குறித்து பரிசீலிப்பதாக முதலமைச்சர் பழனிசாமியிடம் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உறுதி அளித்துள்ளார்.

சென்னை வந்த மத்திய மனிதவள‌ மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சரின் இல்லத்துக்குச் சென்று பழனிசாமியை சந்தித்து பேசினார். அப்போது, மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்குமாறு மத்திய அமைச்சரிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் வலியுறுத்தியுள்ளார். இதற்கு பதிலளித்து பேசிய பிரகாஷ் ஜவடேகர், அதுகுறித்து பரிசீலிப்பதாக பழனிசாமியிடம் உறுதி அளித்தார். இந்த சந்திப்பின் போது மூத்த அமைச்சர்கள் சிலரும் உடனிருந்தனர்.