தமிழ்நாடு

நீட் தேர்வில் விலக்களிக்கும் மசோதாவை மத்திய அரசு ஏற்க நடவடிக்கை வேண்டும் - வேல்முருகன்

நீட் தேர்வில் விலக்களிக்கும் மசோதாவை மத்திய அரசு ஏற்க நடவடிக்கை வேண்டும் - வேல்முருகன்

webteam

நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும் மசோதாவை மத்திய அரசு ஏற்பதற்கு உரிய நடவடிக்கைகளை மாநில அரசு எடுக்கவேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசு உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டவேண்டும் என்றும், அதில் எட்டப்படும் ஒருமித்த கருத்துடன் தமிழக எம்பிக்கள் அனைவரும் சேர்ந்து மோடியிடம் போய் நீட் விலக்கு மசோதாவை ஏற்கச் செய்யவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அவர் மறுப்பாராணால் தமிழக அமைச்சரவை கூடி நீட்டை விலக்குவதுடன் தமிழக அரசு மருத்துவ கல்லூரி இடங்கள் அனைத்தையும் தமிழ்நாடு அரசு பாடதிட்ட மாணவர்களுக்கே ஒதுக்கி ஆணை பிறப்பிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளர். மாநில உரிமைப்படி தமிழக அரசின் மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை தமிழக அரசுதான் முடிவு செய்யவேண்டும் என வேல்முருகன் கூறினார்