தமிழ்நாடு

மூடும் நிலைக்கு சென்ற அரசுப் பள்ளி - மீட்டெடுத்த முன்னாள் மாணவர்கள், ஊர்மக்கள்

மூடும் நிலைக்கு சென்ற அரசுப் பள்ளி - மீட்டெடுத்த முன்னாள் மாணவர்கள், ஊர்மக்கள்

webteam

கன்னியாகுமரி மாவட்டத்தில் அடிப்படை வசதிகள் இன்றி மூடும் நிலைக்கு சென்ற நடுநிலைப்பள்ளியை, முன்னாள் மாணவ‌ர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து சி‌றப்புடன் செயல்படுத்தி வருகின்றனர்.

பூத்துறை மீனவக் கிரா‌மத்தில் உள்‌ள அரசு நடுநிலைப்பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வந்தனர். பள்ளியில் அடிப்படை வசதிகள் மற்றும் போதிய ஆசிரியர்கள் இல்லாததால் மாணவர்கள் சேர்க்கை குறைந்தது. இதனால் இந்தப் பள்ளி மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டது. இதனையடுத்து ‌‌பள்ளியின் முன்னாள் மாணவர்கள் மற்றும் ஊர் மக்கள் இணைந்து நிதி திரட்டி, பள்ளியின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தினர்.

மேலும் கூடுதலாக 6 ஆசிரியர்களை நியமித்து‌ அவர்களுக்கும் ஊர்மக்களே ஊதியம் வழங்கி வருகின்றனர். மாணவர்களின் சேர்க்கையை அதிகப்படுத்த கூடுதல் வகுப்பறைகள், விளையாட்டு மைதானம் போன்றவற்றை அரசு அமைத்துத்தர வேண்டும் எ‌ன பூத்துறை மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.