தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ஈவிகேஸ் இளங்கோவனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
கொரோனா முதல் அலையில் சில அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்களும் பாதிக்கப்பட்டு குணமடைந்தனர். தற்போது இரண்டாம் அலையில் பெரும்பாலான அரசியல் தலைவர்கள் உட்பட பல பிரபலங்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகிவருகின்றனர். அந்த வரிசையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ஈவிகேஸ் இளங்கோவன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தற்போது பெரிய பாதிப்புகள் ஏதும் இல்லாவிட்டாலும் இருதய சிகிச்சை செய்துள்ளார் என்பதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்கள் கண்காணிப்பில் உள்ளார். 20 நாட்களுக்கு முன்னர் கொரோனா முதல் டோஸ் தடுப்பூசியை இவர் செலுத்திக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.