காங்கிரஸ் கட்சியைப் பொருத்தவரையில் பழனிச்சாமி, பன்னீர்செல்வம் ஆகிய இருவருக்குமே ஆதரவளிக்கவில்லை என்றும் பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் அக்கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
சசிகலாவுக்கு, சிறை தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி அதிமுக சட்டமன்றக் குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதிமுக துணைப் பொதுச் செயலாளராக டி.டி.வி.தினகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், பழனிச்சாமி, பன்னீர்செல்வத்திற்கு ஆகிய இருவருக்குமே காங்கிரஸ் ஆதரவளிக்காது. தமிழகத்தில் பொதுத்தேர்தலைத்தான் நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.