வெளிப்பகுதிகளுக்கு செல்வோர் அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயம் என தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனால் அரசு பல்வேறு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் முகக்கவசத்தின் அவசியம் குறித்து பீலா ராஜேஷ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அதில், ஆண்கள், பெண்கள் மற்று குழந்தைகள் என அனைவரும் வீட்டை விட்டு வெளிப்புறத்தில் செல்லும்போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். அத்துடன் வீட்டில் உள்ள வயதானவர்கள், நோய் பாதிப்பு ஏற்படக் கூடியவர்கள் ஆகியோருடன் தொடர்பு கொள்ளும்போதும் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். அனைவரும் முகக்கவசம் அணிந்தால் தான் கொரோனாவின் பரவல் சங்கிலை தடுக்க முடியும்.
மருத்துவமனைகளுக்க்கு வெளிப்புறத்தில் அனைவரும் தங்களிடம் உள்ள கைக்குட்டைகள், துப்பட்டா, அங்கவஸ்தரம் அல்லது வீட்டில் தயாரிக்கப்பட்ட முகக்கவசகங்களை பயன்படுத்தலாம். அவற்றை முறையாக சோப்புபோட்டு துவைத்து, தண்ணீரில் அலசி பின்னர் சூரிய ஒளியில் காயவைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.