1. பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்ட யூ ட்யூபர் ஜோதி மல்ஹோத்ராவிடம் விசாரணை தீவிரம்; தேசிய புலனாய்வு அமைப்பு, உளவுத்துறை, ராணுவ உளவுத்துறை அதிகாரிகள் கிடுக்கிப்பிடி
2. தேனி, திண்டுக்கல், திருப்பூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... நீலகிரியில் மிக கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் கணிப்பு
3. சென்னை புறநகர் பகுதிகளில் பரவலாக மழை.... தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம் சுற்று வட்டாரங்களில் பெய்த மழையால் குளிர்ச்சியான சூழல்....
4. பெங்களூருவில் தொடரும் கனமழையால் ஐபிஎல் போட்டி இடமாற்றம்.. வரும் 23 ஆம்தேதி நடைபெறும் ஐதராபாத்- பெங்களூரு அணிகளுக்கு இடையேயான போட்டி லக்னோவுக்கு மாற்றம்...
5. வீட்டு மின் இணைப்புகளுக்கு எவ்வித மின் கட்டண உயர்வும் இல்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம்... அனைத்து இலவச மின்சாரச் சலுகைகளும் தொடரும் என்றும் திட்டவட்டம்...
6. நடிகர் ரவி மோகனுடனான பிரிவுக்கு பணமோ, அதிகாரமோ காரணம் இல்லை எனவும், மூன்றாவது நபரே காரணம் ஆர்த்தி விளக்கம் ... கெனிஷாவை தன் வாழ்வின் ஒளி என நடிகர் ரவி மோகன் குறிப்பிட்ட நிலையில் ஆர்த்தி விமர்சனம்
7. திருப்பூரில் விஷவாயு தாக்கி உயிரிழந்த மூன்று பேரின் குடும்பத்திற்கு தலா 30 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்கப்படும்... ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில் சாய ஆலை நிர்வாகம் ஒப்புதல்...
8. கொரோனா குறித்து பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம் என பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் அறிவுறுத்தல்.... மற்ற வைரஸ்களை போலவே கொரோனாவும் இருந்துகொண்டுதான் இருக்கும் என விளக்கம்....
9. சிவகங்கை அருகே கல்குவாரி விபத்தில் 5 பேர் உயிரிழந்த விபத்தில் குவாரி உரிமையாளர் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு.. உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் ரூபாய் நிதி அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
10. நீதித் துறை பணியில் சேர குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் வழக்கறிஞராக பயிற்சி பெற்றிருக்கவேண்டும்... உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு உத்தரவு...