voter list, Tejaswi  pt web
தமிழ்நாடு

HeadLines | S.I.R தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டம் To வென்றால் கள்ளுக்கு அனுமதி - தேஜஸ்வி வாக்குறுதி

இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தலைப்புச் செய்திகளை இங்கே பார்க்கலாம்.

PT WEB

ஜப்பான் பிரதமருடன் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சந்திப்பு.. அரிய கனிமங்கள் உள்ளிட்ட பொருட்கள் வர்த்தகம் தொடர்பாக ஒப்பந்தம் கையெழுத்து...

மத்திய அரசு ஊழியர்கள் சம்பள உயர்வை முடிவு செய்யும் 8ஆவது ஊதியக்குழுவுக்கு உறுப்பினர்கள் நியமனம்... பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்...

பிஹார் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் அறிக்கையை வெளியிட்டது இந்தியா கூட்டணி... குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப்பணி, பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என வாக்குறுதி...

பிஹாரில் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கள்ளுக்கு அனுமதி அளிப்போம்... இந்தியா கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் வாக்குறுதி...

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம்... திமுக, அதிமுக உள்ளிட்ட 12 கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் அழைப்பு...

திமுக இந்த மண்ணில் இருக்கும்வரை பாஜகவின் பகல் கனவு பலிக்காது... வாக்குரிமையை பறிக்கும் S.I.R. பணிகளை கண்காணிக்க திமுகவினருக்கு கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவு...

சென்னையில் அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி கே.பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றார் கபடி வீராங்கனை கார்த்திகா... ஆசிய ஜூனியர் கபடியில் சாதித்ததற்கு ஒரு லட்சம் ரூபாய் காசோலை வழங்கி பாராட்டு...

கரூர் துயர சம்பவத்திற்குப் பிறகு, பொதுப் பிரச்சினைக்காக அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்... மழையில் பயிர்கள் நனைந்து வீணாவதை தடுக்க தமிழக அரசுக்கு கோரிக்கை...

விஜய் - சீமான்

கரூர் குற்றத்துக்கு முதன்மை காரணம் விஜய்தான் என நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றச்சாட்டு... விஜயை சிபிஐ வழக்கில் சேர்க்காமல் இருப்பது கூட்டணிக்காகத்தான் என்றும் பேட்டி...

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் எந்தவித கட்டுமானங்களுக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை... காப்புக்காடு ராம்சார் தலத்தில் கட்டுமானம் என்பது தவறானது என தமிழக அரசு விளக்கம்...

ஒரே நாளில் 3 ஆயிரம் ரூபாய் குறைந்தது தங்கம் விலை... ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 88 ஆயிரத்து 600க்கு விற்பனை...

தங்கம்

மஹாராஷ்டிர மாநிலம் அமராவதியில் பிரமாண்ட டிராக்டர் பேரணி... கடன்களை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி பேரணி சென்ற விவசாயிகள்....

திண்டுக்கல்லில் சட்டவிரோத கருக்கலைப்பு முயற்சியால் பாதிக்கப்பட்ட சிறுமி உயிரிழப்பு... உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மரணம்...

விலா எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஷ்ரேயஸ் ஐயரின் உடல்நிலையில் முன்னேற்றம்... தீவிர சிகிச்சை பிரிவிலிருந்து சாதாரண பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல்...