போயஸ் தோட்டம் ஜெயலலிதா இல்லத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்ய வேண்டும் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொது செயலாளர் ஈஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்த கருத்தால் ஜெயலலிதா மரணம் குறித்த சர்ச்சை மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதையடுத்து தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் சிபிஐ விசாரணை வேண்டும், அமைச்சர்கள் பொய் கூறியதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கருத்து தெரிவித்துள்ள ஈஸ்வரன், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார். அத்துடன் அப்போலோ மற்றும் ஜெயலலிதா இல்லம் அமைந்துள்ள போயஸ் தோட்டம் பகுதியிலுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை சிபிஐ ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் தொடர்ந்து குதிரை பேரம் நடைபெறுதாகவும், அதனை ஆளுநர் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.