சடலமாக கிடந்த பெண் pt desk
தமிழ்நாடு

ஈரோடு|தலையில் ரத்த காயத்துடன் சடலமாக கிடந்த மனைவி - வேலை முடிந்து வீடு திரும்பிய கணவருக்கு அதிர்ச்சி

ஈரோடு அருகே வீட்டில் இருந்த பெண் தலையில் பலத்த ரத்த காயத்துடன் உயிரிழந்து கிடந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

PT WEB

செய்தியாளர்: ரா.மணிகண்டன்

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே விஜயமங்கலம் அம்மன் கோயில் அருகில் கணேஷ்ராஜ் - ஜானகி தம்பதியினர் தங்களது ஐந்து வயது மகனுடன் வசித்து வந்துள்ளனர். ஸ்பின்னிங் மில்லில் பிட்டராக பணிபுரிந்து வரும் கனேஷ்ராஜ், நேற்று நள்ளிரவு பணி முடிந்து வீட்டிற்கு வந்து பார்த்துள்ளார். அப்போது ஜானகி, தலையில் காயத்துடன் உயிரிழந்து கிடந்துள்ளார். இதுகுறித்து கணேஷ்ராஜ் பெருந்துறை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

ஆதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்ட போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.