சத்தியமங்கலத்தில் போலீஸ் ஏட்டு மனைவி தனக்குத் தானே கழுத்தை பிளேடால் அறுத்துக் கொண்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் காவலர் குடியிருப்பில் சோகத்தை ஏற்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் போலீஸ் ஏட்டு சந்திரமோகன் (45). ஆசனூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் இவர், தனது மனைவி தாமரைச்செல்வி (41) மற்றும் இரண்டு மகன்களுடன் சத்தியமங்கலம் கரட்டூரில் உள்ள போலீஸ் குடியிருப்பில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் இவரது மனைவி தாமரைச்செல்வி கடந்த இரண்டு ஆண்டுகளாக எலும்பு மஜ்ஜை நோயால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமாகாத நிலையில் இன்று காலை வலி தாங்க முடியாமல் அவதிப்பட்ட தாமரைச்செல்வி பிளேடால் தனக்கு தானே தனது கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து அவரது குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு சத்தியமங்கலம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் தாமரைச்செல்வி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து சத்தியமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)