திலகவதி, ஈரோடு தாய்
திலகவதி, ஈரோடு தாய் pt desk
தமிழ்நாடு

“பெத்த வயிறு பட்டினியா கிடக்கு... விரட்டிட்டாங்க” மகன் மருமகள் மீது ஆட்சியரிடம் புகாரளித்த மூதாட்டி!

webteam

2ஈரோடு மாவட்டம் திருநகர் காலனியைச் சேர்ந்தவர் திலகவதி. இவரது கணவர் உயிரிழந்த நிலையில், தனது இரு மகன்கள் மற்றும் அவர்களது குடும்பத்துடன் சொந்த வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், இரு மகன்களும் தாயை சரிவர கவனிக்காததால் ஆத்திரமடைந்த திலகவதி, இருவரையும் வீட்டை காலிசெய்ய அறிவுறுத்தியதோடு, வாடகைக்குவிட்டு அதன் மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டு வாழ்க்கை நடத்த திட்டமிட்டுள்ளார்.

திலகவதியின் வீடு

ஆனால் இரண்டாவது மகன் செந்தில், வீட்டை காலி செய்யாமல் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், உடல்நிலை சரியில்லாததால் திலகவதி, மூத்த மகன் கார்த்திக் வீட்டிற்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார்.

அப்போது திலகவதி வசித்த வீட்டின் கதவில் மேலும் ஒரு பூட்டு போடப்பட்டு இருந்துள்ளது. இது குறித்து மகன் செந்திலிடம் கேட்டதற்கு “இனி இந்த வீடு என்னுடையது. அங்கிருந்து வெளியேறிவிடுங்க” என அவர் கூறியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து வயதான காலத்தில் திலகவதி செல்ல இடமின்றி தவித்துள்ளார். இதனால், தான் இருந்த வீட்டை இளைய மகன் செந்தில் மற்றும் அவருடைய மனைவி சரண்யா ஆகியோர் அபகரிக்க முயற்சி செய்கின்றனர் என்று கருங்கல்பாளையம் காவல் நிலையம் மற்றும் ஆட்சியர் குறைதீர்ப்பு கூட்டத்தில் திலகவதி புகார் அளித்துள்ளார்.

திலகவதி

ஆனால், புகார் மீது எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என வேதனை தெரிவித்த திலகவதி, தற்போது தங்க வீடில்லாமல் உறவினர்கள் நண்பர்கள் வீட்டில் தங்கி வருவதாக தெரிவித்தார்.

ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுத்து வீட்டை மீட்டுத் தரும்படி கண்ணீர் மல்க அவர் கோரிக்கை வைத்தது, பார்ப்போரையும் கண்கலங்க வைத்துள்ளது.