மது பாட்டில்கள் பறிமுதல் pt desk
தமிழ்நாடு

ஈரோடு: சட்டவிரோத மது விற்பனை... 800 மது பாட்டில்கள் பறிமுதல் - மூவரிடம் போலீசார் விசாரணை

ஈரோடு அருகே சட்டவிரோதமாக அதிக விலைக்கு மதுபாட்டில்களை விற்பனை செய்ததாக மூவரை பிடித்துள்ள காவல்துறையினர் 800க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர்.

PT WEB

செய்தியாளர்: ரா.மணிகண்டன்

ஈரோடு மாவட்டம் பவானி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக சட்ட விரோதமாக கூடுதல் விலைக்கு மது பாட்டில்கள விற்பனை செய்து வருவதாக ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவஹர் அவர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து பவானி டிஎஸ்பி தலைமையிலான தனிப்படையினர் பல்வேறு பகுதிகளில் சோதனை மேற்கொண்டனர்.

மது பாட்டில்கள் பறிமுதல்

இதில், பவானி மேற்கு தெரு, பூக்கடை வீதி, கீரைக்காரர் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சட்ட விரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து அப்பகுதிகளில் இருந்து சுமார் 800-க்கும் மேற்பட்ட மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், மூன்று பேரை பவானி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.