ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக்குறைவால் காலமான நிலையில், அங்கு இடைத்தேர்தல் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இடைத்தேர்தலில் திமுக களமிறங்கிய சூழலில், அதன் வேட்பாளராக சந்திரகுமார் அறிவிக்கப்பட்டார்.
அதேசமயம், எதிர்க்கட்சிகளான அதிமுக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இடைத்தேர்தலை புறக்கணித்தன. நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் 10ஆம் தேதி தொடங்கிய நிலையில், 17ஆம் தேதி நிறைவடைந்தது. இதில் மொத்தம் 65 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மனுக்களுக்கான பரிசீலனை, தேர்தல் நடத்தும் அலுவலர் மனீஷ் தலைமையில் நடைபெற்றது.
இதில், திமுக வேட்பாளர் சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி உள்ளிட்ட 55 வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், திமுகவுக்கும் தனக்கும் உள்ள உறவு குறித்து நாதக வேட்பாளர் சீதாலட்சுமி அதிரடி பேட்டியளித்துள்ளார். அவருடைய பேட்டியைக் காண இந்த வீடியோவைப் பார்க்கவும்.