தமிழ்நாடு

பத்து அடி ஆழ குழி தோண்டி விரதம் இருக்கும் சாமியார்..! ஆசி பெற்றுச் செல்லும் மக்கள்..!

பத்து அடி ஆழ குழி தோண்டி விரதம் இருக்கும் சாமியார்..! ஆசி பெற்றுச் செல்லும் மக்கள்..!

webteam

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே 10 அடி ஆழ குழிக்குள் இறங்கி விரதத்தை மேற்கொண்டு சாமியாரிடம் சுற்றுவட்டார மக்கள் ஆசி பெற்று செல்கின்றனர்.

நல்லிக்கவுண்டன்புதூர் கிராமத்தை சேர்ந்தர் விஸ்வநாதன். இவருக்கு திருமணமாகி இரண்டு மகள்கள் உள்ள நிலையில் கடந்த 15 ஆண்டுகளாக துறவறம் மேற்கொண்டுள்ளா‌ர். ஆன்மிகத்தில் நாட்டம் கொண்ட விஸ்வநாதன், அமர்நாத் புனித யாத்திரை சென்று வந்த பின்னர் ‌நிஜானந்த காசி விஸ்வநாத சுவாமிகள் என தனது பெயரை மாற்றிக் கொண்டுள்ளார். 

இவர் ‌கடந்த 17-ஆம் தேதி தனது சொந்த இடத்தில் பத்து அடி ஆழத்திற்கு குழி தோண்டி அதற்குள் இறங்கி 48 நாள்கள் விரதம் தொடங்கினார். குழியில் பாதாள லிங்கம் வைத்து உணவு அருந்தாமல் மவுன விரதம் மேற்கொண்டு வரும் அவரை நேரில் சென்று அப்பகுதி மக்கள் ஆசி பெற்றுச் செல்கின்றனர்.