தமிழ்நாடு

மலைக் கிராமங்களுக்கு நேரடியாகச் சென்று நிலஉரிமை பட்டா வழங்கிய ஈரோடு ஆட்சியர்

மலைக் கிராமங்களுக்கு நேரடியாகச் சென்று நிலஉரிமை பட்டா வழங்கிய ஈரோடு ஆட்சியர்

kaleelrahman

தாளவாடி மலைக் கிராமங்களில் உள்ள வீடுகளுக்குச் சென்று பழங்குடியின மக்களுக்கு ஈரோடு மாவட்ட ஆட்சியர் சான்றிதழ் வழங்கினார்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தாளவாடி கோட்டத்தில் வாழும் பழங்குடியினருக்கு நீண்ட நாட்களாக சாதிச்சான்றிதழ் வழங்கப்படாமல் இருந்தது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் கிருண்ணனுண்ணியின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. மேலும் மலைக்கிராமங்களில் இலவச வீட்டுமனை பட்டா வழங்காமல் நிலஉரிமையின்றி இருப்பதாகவும் கோரிக்கை மனுக்கள் மூலம் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து மாவட்ட ஆட்சியர், மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து தாளவாடி வனப்பகுதியில் உள்ள அரேப்பாளையம், தேவர்நத்தம் இட்டரை, எலக்கடை, திகினாரை, மல்லன்குழி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு நேரில் சென்று நிலஉரிமைக்கான பட்டாக்களை வழங்கினார்.


அதேபோல் 327 பேருக்கு வீட்டுமனை பட்டா, பள்ளி மாணவ, மாணவியருக்கு இந்து ஊராளிக்கான சான்றிதழ் ஆகியவற்றை வழங்கினார். அரேப்பாளையத்தில் வேளாண் உற்பத்தியாளர்களிடம் கலந்துரையாடல் நடத்திய மாவட்ட ஆட்சியர், வேளாண் உற்பத்தியாளர் தாயரிக்கும் மதிப்புகூட்டப்பட்ட பொருள்களை பார்வையிட்டார்.