தமிழ்நாடு

ஈரோடு இடைத்தேர்தல்: பொய்யான வாக்குறுதிகளை கொடுக்கும் அமைச்சர்கள் - தேமுதிக சுதீஷ்

webteam

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலுக்காக திமுகவினர் பொய்யான வாக்குறுதிகளை கொடுக்கின்றனர் என தேமுதிக துணைச் செயலாளர் சுதீஷ் தெரிவித்தார்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் தேமுதிக தலைமை தேர்தல் அலுவலகத்தை அக்கட்சியின் துணைச் செயலாளர் சுதீஷ் இன்று திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்,

இன்று முதல் 40 பேச்சாளர்கள் வாக்கு சேகரிக்க உள்ளனர். அவர்கள் வரும் 25 ஆம் தேதி வரை பரப்புரையில் ஈடுபட இருக்கின்றனர். தேர்தல் விதிமீறல்கள் குறித்து ஒரு வாரத்திற்கு முன்பு தேர்தல் ஆணையரிடம் மனு கொடுத்து இருக்கின்றோம். பல இடங்களில் கொடிகள் அகற்றப்படவில்லை, பணப்பட்டுவாடா நடைபெறுகிறது என தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுத்திருந்தோம்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் மத்திய பாதுகாப்பு படையை ஈடுபடுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளோம், தமிழக இளைஞர்களுக்கு இங்குள்ள நிறுவனங்கள் வேலை வாய்ப்பு தர வேண்டும், நம்மவர்களுக்கு வேலை கொடுத்தால் வடமாநிலத்தவர் ஏன் வரப் போகின்றார்கள். தமிழகத்தில் இருக்கும் இளைஞர்களுக்கு இங்கிருக்கும் நிறுவனங்கள் வாய்ப்பு கொடுக்க வேண்டும்.

இடைத் தேர்தலுக்காக திமுக அமைச்சர்கள் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து வருகின்றனர் என அவர் குற்றம ;சாட்டினார். பேட்டியின் போது தேமுதிக வேட்பாளர் ஆனந்த் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.