EPS
EPS pt desk
தமிழ்நாடு

"நேரத்திற்கேற்ப, சூழ்நிலைக்கேற்ப கூட்டணி மாறுகிறார்கள்" - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

webteam

செய்தியாளர்: சே.விவேகானந்தன்

தருமபுரி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டும் அதிமுக வேட்பாளர் ஆர்.அசோகனை ஆதரித்து வள்ளலார் திடலில் நேற்று நடைபெற்ற பிரசாரப் பொதுக்கூட்டத்தில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு வாக்கு சேகரித்தார்.

அதிமுக பிரசார பொதுக்கூட்டம்

இந்த கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி....

‘தருமபுரி அதிமுக-வின் கோட்டை!’

“இத்தொகுதியில் அதிமுக வேட்பாளராக இருப்பவர், அதிமுக குடும்பத்தை சேர்ந்தவர். இந்த தொகுதி ஒரு சவாலான தொகுதி. இதில், அதிமுக வெற்றி பெற வேண்டும். ஏனென்றால் சில கட்சியினர் நேரத்திற்கேற்ப, சூழ்நிலைக்கேற்ப கூட்டணி மாறுகிறவர்களாக இருக்கிறார்கள். தருமபுரி தொகுதியை அவர்களின் கோட்டையாக எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். இது அவர்களின் கோட்டையல்ல, அதிமுகவின் கோட்டை என்பதை நிரூபிக்க வேண்டும்.

‘நம் பிள்ளைகள் போதைக்கு அடிமையாகி சீரழிகின்றனர்’

அதிமுக ஆட்சி இருண்ட காலம் என தருமபுரியில் ஸ்டாலின் பேசியுள்ளார். பொது மேடை போடுங்கள்... விவாதத்திற்கு வாருங்கள். நாங்கள் செய்த திட்டங்களை பட்டியலிடுகிறேன். ஆனால், நீங்கள் துண்டு சீட்டு இல்லாமல் பேச வேண்டும். திமுக ஆட்சியில் கஞ்சா, மது, போதைப் பொருட்கள் விற்பனை, கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை குற்றங்கள் பல நடைபெறுகின்றன. நம் பிள்ளைகள் பலரும் போதைக்கு அடிமையாகி சீரழிகின்றனர்.

‘எய்ம்ஸ்-ஐ கொண்டுவந்தது யார்?’

ஆனால் இதற்கிடையே ஒருவர் கையில் செங்கல்லை எடுத்துக் கொண்டு இன்று சுற்றி வருகிறார். எய்ம்ஸ் மருத்துவமனைக்கான திட்டம், ஜெயலலிதா கோரிக்கை வைத்ததால், பாரத பிரதமர் அப்போது அடிக்கல் நாட்டினார். ஆனால், கட்டுவதற்கு திமுக கூட்டணி கட்சி எம்பிக்கள் 38 பேர் பேசவில்லை.

Public meeting

ஸ்டாலினுக்கு மக்களை பற்றி கவலை இல்லை. தனது குடும்பத்தில் நலன் முக்கியம். குடும்ப உறுப்பினர் பதவிக்கு வரணும். அதுதான் முக்கியம். இவர்தான் இந்தியாவை காப்பாற்ற போகிறாராம்” என்றார். இந்நிகழ்வில் பிரதமர் மோடியை பற்றியோ, பாஜக-வை பற்றியோ அவர் பேசவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது