ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடும் அதிமுக நிர்வாகி செந்தில்முருகனை கட்சியில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடாத நிலையில் அக்கட்சியின் மாநகர எம்.ஜி.ஆர் இளைஞரணி துணைச்செயலாளரான செந்தில்முருகன் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். இந்த நிலையில் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக செந்தில்முருகனை கட்சியில் இருந்து நீக்கி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த முறை நடந்த இடைத்தேர்தலில் ஓபிஎஸ் அணி சார்பில் செந்தில்முருகன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார். பின்னர் அவர் ஓபிஎஸ் அணியில் இருந்து விலகி, இபிஎஸ் தலைமையில் அதிமுகவில் இணைந்தார்.