இ-பாஸ் முறை இருந்தால்தான் யார் எங்கு செல்கிறார்கள் என்பதை கண்டறிய முடியும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கடலூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் "இ-பாஸ் முறை இருந்தால்தான் யார் எங்கு செல்கிறார்கள் என்பதை கண்டறிய முடியும். எனவே இ-பாஸ் அவசியம். தமிழகத்தில் கொரோனா தொற்றை தடுக்க தமிழக அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா தொற்றுக்கு ஆளாகும் நபர்கள் அச்சப்பட வேண்டாம். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது" என்றார் பழனிசாமி.