தமிழ்நாடு

தமிழகத்தில் இபாஸ் முறை ரத்து - கூடுதல் தளர்வுகளுடன் பொதுமுடக்கம்

தமிழகத்தில் இபாஸ் முறை ரத்து - கூடுதல் தளர்வுகளுடன் பொதுமுடக்கம்

webteam

தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்த அறிவிப்பில், “தமிழகத்தில் இபாஸ் முறை ரத்து செய்யப்படுகிறது. வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து வருவோருக்கு இபாஸ் முறை தொடரும். அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்களின் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஞாயிற்று கிழமைகளில் முழுமுடக்கம் இனி இல்லை.

மாவட்டத்திற்குள் பொது போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்படுகிறது. சென்னையில் ஒன்றாம் தேதி முதல் பேருந்துகள் ஓடும். செப்டம்பர் 7ஆம் தேதி முதல் மெட்ரோ ரயில் சேவைக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் இரவு 8 மணி வரை கடைகள் இயங்கலாம்.

வணிக வளாகங்கள், பெரிய கடைகள் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்கலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.