தமிழ்நாடு

"சுற்றுச்சூழல் பிரச்னைகள் அரசியல் பிரச்னைகளாக மாற வேண்டும்" ஜக்கி வாசுதேவ்

jagadeesh

பூமிக்கு ஆபத்தை விளைவிக்கும் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் அரசியல் பிரச்சினைகளாக மாற வேண்டும் என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்:

சர்வதேச பூமி தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதை முன்னிட்டு உலகின் மிகப்பெரிய சுற்றுச்சூழல் அமைப்பான இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச கூட்டமைப்பின் இந்திய உறுப்பினர்கள், கோவிட் 19 பிரச்னைக்கு பிந்தைய சவால்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்து ஆன்லைனில் கலந்துரையாடினர். இவ்வமைப்பில் உறுப்பினராக அங்கம் வகிக்கும் ஈஷா அறக்கட்டளையின் சுற்றுச்சூழல் பிரிவான ஈஷா அவுட்ரீச் அமைப்பும் இக்கூட்டத்தில் பங்கேற்றது.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற உறுப்பினர்களுக்கு ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் கூறியதாவது " இந்த பூமியில் உள்ள உயிர்களுக்கு உங்களுடைய வெற்றி மிகவும் முக்கியமானது. பூமிக்கு ஆபத்தை விளைவிக்கும் சுற்றுச்சூழல் சவால்களை எதிர்கொள்ள சர்வதேச அளவில் ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு, சுற்றுச்சூழல் பிரச்சினைகள் உலகெங்கும் உள்ள அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் அரசியல் பிரச்சினைகளாக மாற வேண்டும். மிகப்பெரிய அளவில், கொள்கை ரீதியான மாற்றங்கள் உருவாக்கப்பட வேண்டும்" என்றார்.