தலைமறைவாக உள்ள காஞ்சிபுரம் ரவுடி ஸ்ரீதரின் மனைவி குமாரி மீண்டும் அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு முன்பு ஆஜரானார்.
சொத்து ஆவணங்கள் குறித்து விளக்கம் அளிப்பது தொடர்பாக வழக்கறிஞருடன் ஆஜரான குமாரியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை உள்ளிட்ட பல வழக்குகளில் தேடப்பட்டு வரும் ஸ்ரீதர் 2002 ஆம் ஆண்டிலிருந்து தலைமறைவாக இருந்து வருகிறார். வெளிநாடுகளிலிருந்து பல கோடி ரூபாய் சட்டவிரோதமாக முதலீடு செய்யப்பட்டது குறித்து அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறது. ஸ்ரீதர் குடும்பத்திற்கு சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை ஏற்கனவே அமலாக்கத்துறை முடக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.