தமிழ்நாடு

தினகரன் மீது அமலாக்கத்துறையும் வழக்குப் பதிவு

தினகரன் மீது அமலாக்கத்துறையும் வழக்குப் பதிவு

webteam

டிடிவி தினகரன் மீது டெல்லி காவல் துறை வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்துள்ள நிலையில், அமலாக்கத் துறையும் தினகரன் மீது வழக்குப் பதிவு செய்திருக்கிறது.

இரட்டை இலைச் சின்னத்தைப் பெற தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் தர முயன்ற புகாரில் சட்ட விரோத பணப் பரிமாற்றம் நடந்திருப்பதாகக் கூறி அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. சட்ட விரோத பணப் பரிமாற்றத் தடை சட்டத்தின்கீழ் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. டெல்லி போலீசார் தொடர்ந்துள்ள வழக்கில் மே 15 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் திகார் சிறையில் தினகரன் அடைக்கப்பட்டுள்ளார். அவரது 5 வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.