தமிழ்நாடு

‘இந்த சாதியினர் மட்டும் விண்ணப்பிக்கலாம்’ - பத்திரிகையில் வேலைவாய்ப்பு விளம்பரம்

‘இந்த சாதியினர் மட்டும் விண்ணப்பிக்கலாம்’ - பத்திரிகையில் வேலைவாய்ப்பு விளம்பரம்

rajakannan

நாளிதழ் ஒன்றில் வெளியான வேலைவாய்ப்பு விளம்பரத்தில் குறிப்பிட்ட சாதியினர் மட்டும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நாடு சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்கு மேல் ஆகின்றன. இந்திய நாட்டில் உள்ள அனைவரும் சமம் என்று அரசியலமைப்பு சட்டம் கூறுகின்றது. சுதந்திரத்திற்கு பிறகு நாடு பல்வேறு மாறுதல்களை அடைந்திருந்தாலும், சாதி ரீதியான ஏற்றத்தாழ்வுகள் இன்னும் நீடித்து வருகிறது. தற்போதும், தனி சுடுகாடு, ஆணவக் கொலை குறித்த செய்திகளை தொடர்ச்சியாக ஊடகங்களில் பார்க்கதான் முடிகிறது. 

இருப்பினும், இப்பலாம் யார் சார் சாதி பார்க்கிறார்கள் என்ற கருத்தினை பலரும் தெரிவித்து வருகிறார்கள். இத்தகைய நிலையில்தான், சென்னையில் இயங்கி வரும் நாளிதழில் வேலைவாய்ப்பு விளம்பரம் ஒன்று வெளியாகியுள்ளது. அதில், ஜெனரல் மேனேஜர் வேலைக்கான விளம்பரம் அது. அதில், என்ன கல்வித் தகுதி வேண்டும், எத்தனை வருடம் அனுபவம் இருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தகவல்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால், அதோடு குறிப்பிட்ட சாதியினர் மட்டும் விண்ணப்பிக்கலாம் என்ற தகவலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சமூக வலைதளங்களில் இந்த விளம்பரம் பகிரப்பட்டு வருகிறது. இதனை பலரும் பகிர்ந்து சாதி குறித்த தங்கள் விமர்சனங்களை வைக்கிறார்கள்.