சென்னை பேசின்பிரிட்ஜ் ரயில்வே பாலத்தில் பணிசெய்த ஊழியர் ஒருவர் ஆற்றில் தவறி விழுந்தார்.
ரயில்வேயில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்தவர் கமலேஷ். இவர் அன்னை சத்யா நகர் பகுதியை சேர்ந்தவர். நேற்று காலை கமலேஷ் தண்டாவளத்தில் ஏற்பட்ட பழுதை சரிசெய்யும் பணியில் ஈடுப்பட்டுள்ளார். அப்போது அவர் கால் தவறி அருகில் உள்ள ஆற்றில் தவறி விழுந்துள்ளார். ஆனால் சம்பவம் நடந்து பல மணி நேரம் ஆகியும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை. இதனால் கமலேஷ் ஆற்றில் அடித்து செல்லப்பட்டுள்ளார். வேலைக்கு சென்ற மகன் இரவு வீடு திரும்பாததால், அவரின் பெற்றோர்கள் காவல் துறையினரிடம் புகார் கொடுத்துள்ளனர். அதன் பின்பு நடத்தப்பட்ட விசாரணையில் கமலேஷ் ஆற்றில் தவறி விழுந்தது இன்றுதான் தெரிந்துள்ளது.ஆற்றில் தவறி விழுந்த தனது மகனை விரைந்து தேடுமாறு காவல் துறையினரிடம் கமலேஷின் தாய் கோரிக்கை வைத்துள்ளார்.