தமிழ்நாடு

நள்ளிரவில் வீட்டின் கதவை தட்டிய யானைகள்

நள்ளிரவில் வீட்டின் கதவை தட்டிய யானைகள்

webteam

கோவை மாவட்டத்தில் நள்ளிரவில் வந்து வீட்டின் கதவை தட்டிய யானைகளால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர். 

கோவையில் உள்ள தடாகம் பகுதியில் கடந்த சில மாதங்களாக யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகின்றன. இதனால் பொதுமக்கள் நாள்தோறும் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், அந்த பகுதியில் வீட்டை உடைத்துக்கொண்டு காட்டு யானைகள் உள்ளே நுழைய முயன்ற காட்சிகள் வெளியாகியுள்ளன. அனுபாவி சுப்ரமணிய சுவாமி கோயில் அருகே உள்ள குடியிருப்பு‌களில் நள்ளிரவு காட்டுயானை அதன் குட்டியானையுடன் புகுந்தது. இதனைக் கண்ட அந்த பகுதி மக்கள் அலரியடித்தப்படி ஓடியுள்ளனர்.

அப்போது சிவாத்தாள் என்பவரின் வீட்டுக் கதவை உடைத்துக்கொண்டு யானைகள் உள்ளே நுழைய முயன்றபோது, வீட்டிலிருந்தவர்கள் கூச்சலிட்டுள்ளனர். பார்ப்பவர்களுக்கு அச்சத்தை தரும் இந்த காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. இந்த சம்பவத்தில் வீட்டின் கதவுகள் மற்றும் பொருட்கள் சேதமடைந்துள்ளன. யானைகளால் அதிர்ஷடவசமாக உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.