தமிழ்நாடு

முதுமலையில் யானைகளுக்கு உடல் எடை சோதனை

முதுமலையில் யானைகளுக்கு உடல் எடை சோதனை

webteam

நீலகிரி மாவட்டம் முதுமலை, தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் உள்ள யானைகளுக்கு உடல் எடை பரிசோதனை செய்யப்பட்டது.

நீலகிரி மாவட்டம் முதுமலை, தெப்பக்காடு யானைகள் முகாமில் பராமரிக்கப்படும் வளர்ப்பு யானைகளுக்கு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை உடல் எடை பரிசோதனை செய்வது வழக்கம். யானைகளின் உடல் எடை அளவை பொருத்து உணவு உள்ளிடைவைகளில் மாற்றங்கள் செய்யப்படும். இந்த நிலையில் இன்று வளர்ப்பு யானைகளுக்கு தொரப்பள்ளி பகுதியில் வைத்து உடல் எடை பரிசோதனை செய்யப்பட்டது. கடந்தாண்டு கூடலூர் அருகேயுள்ள சேரம்பாடி வனபகுதியில் இருந்து பிடித்து வரப்பட்டு இங்கு பராமரிக்கப்பட்டு வரும் யானையும் முதல்முறையாக உடல் எடை பரிசோதனையில் பங்கேற்றது. முதுமலை வனப்பகுதியில் பசுமையான சூழல் நிலவுவதால் அனைத்து யானைகளுக்கும் உடல் எடை அதிகரித்துள்ளது.