தமிழ்நாடு

வண்டலூர் பூங்கா யானைகள் அதிரடியாக இட மாற்றம்

வண்டலூர் பூங்கா யானைகள் அதிரடியாக இட மாற்றம்

Rasus

மதம் பிடிக்கும் அறிகுறி தென்பட்டதால் வண்டலூர் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த இரண்டு ஆண் யானைகள், காப்பகத்தில் கொண்டுபோய் விடப்பட்டது.

கடந்த 2010-ம் ஆண்டு கிருஷ்ணகிரி வனப்பகுதியில் தாய் யானையால் கைவிடப்பட்ட உரிகன், கிரி ஆகிய இரண்டு ஆண் யானைகள் மீட்டெடுக்கப்பட்டு வண்டலூர் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்தது. உரிகன் என்ற ஆண் யானைக்கு தற்போது 9 வயது ஆகியது. கிரி யானைக்கு எட்டரை வயது ஆகிறது. இதனிடையே வயது முதிர்ச்சி காரணமாக கடந்த சில நாட்களாக இவ்விரு யானைகளுக்கும் மதம் பிடிக்கும் அறிகுறிகள் தென்பட்டுள்ளன. இதனால் வனவிலங்கு மருத்துவர்கள் ஆலோசனைப்படி பாதுகாப்பு நிலைக் கருதி இரு ஆண் யானைகளும் முதுமலை மற்றும் ஆனைமலை யானைகள் காப்பகத்திற்கு மாற்றப்பட்டுள்ளன.

தற்போது வண்டலூர் உயிரியல் பூங்காவில் அசோகன் (7) என்ற ஆண் யானைகுட்டி மற்றும் பிரக்ருதி (4) என்ற பெண் குட்டியானை உள்ளதாக பூங்கா நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல்கள்: சாந்தகுமார், செய்தியாளர்.