தமிழ்நாடு

சீண்டும் ஊழியர்: விடாமல் துரத்தும் காட்டு யானை

சீண்டும் ஊழியர்: விடாமல் துரத்தும் காட்டு யானை

webteam

கோவை மாவட்டம் சின்னத்தடாகம் அருகே உள்ள செங்கல் சூளை பகுதியில் புகுந்த காட்டுயானை, ஊழியர் ஒருவரை விரட்டி வரும் காட்சிகள் வெளியாகியுள்ளது. 

செங்கல் சூளை பகுதிக்கு வந்த ஒற்றை காட்டு யானையை, அங்கு பணிபுரியும் ஊழியர் ஒருவர் சீண்டி தொந்தரவு செய்துள்ளார். இதனால் கோபம் அடைந்த காட்டு யானை, அவரை விடாமல் துரத்திச் செல்கிறது.  யானையை ஊழியர் சீண்டுவதையும், அந்த ஊழியரை காட்டு யானை துரத்தி வரும் காட்சியையும் அருகில் உள்ள நபர் ஒருவர் செல்போன் மூலம் பதிவு செய்துள்ளார். 

மிகுந்த கோபத்துடன் ஊழியரை விரட்டி வரும் காட்டு யானை செங்கல் சூளையின் தாழ்வான பகுதியினை கடக்க முடியாமல் ஆக்ரோஷத்துடன் இருப்பதும் அந்த காட்சியில் பதிவாகியுள்ளது. காட்டு யானை துரத்தியதால் அச்சம் அடைந்த ஊழியர் செய்வதறியாமல் திகைத்து நிற்கும் காட்சிகள் பார்பவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.