தமிழக - கேரள எல்லையை அடுத்த கோட்டைக்காடு பகுதியில் ரயில் மோதி காட்டுயானை பரிதாபமாக உயிரிழந்தது.
கேரள வனப்பகுதியில் இருந்து நேற்று இரவு வெளியே வந்த காட்டுயானை பாலக்காடு மாவட்டம் கோட்டை காடு என்ற இடத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்றது. அப்போது கேரளாவில் இருந்து கோவை நோக்கி வந்த ரயில் மோதியதில், அந்த யானை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.
இதையடுத்து தகவல் அறிந்து வந்த கேரள வனத்துறையினர் யானையின் உடலை கைப்பற்றினர். அது சுமார் 20 வயது மதிக்கத்தக்க ஆண் யானை என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். வனப்பகுதி வழியாக செல்லும் ரயில்கள் குறைந்த வேகத்தில் இயக்க வேண்டும் தொடர் கோரிக்கை எழுந்த வரும் நிலையில், விபத்தில் யானை உயிரிழந்த சம்பவம் வன ஆர்வலர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.