தமிழ்நாடு

மின்வேலியில் சிக்கி யானை பலி - விவசாயி கைது

மின்வேலியில் சிக்கி யானை பலி - விவசாயி கைது

webteam

ஈரோட்டில் மின்சாரம் தாக்கி யானை இறந்த சம்பவத்தில் விவசாயி கைது செய்யப்பட்டார்.

ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள முதியனூர் கிராமத்தை சேர்ந்தவர் மாதேவசாமி. விவசாயியான இவர், காட்டு விலங்குகள் விளைநிலத்திற்குள் வராமல் இருப்பதற்காக நிலத்தைச்சுற்றி மின்வேலி அமைத்துள்ளார். இந்நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு வனப்பகுதியை விட்டு வெளியேறிய யானை ‌ஒன்று, மாதேவசாமியின் நிலத்திற்குள் நுழைய முற்பட்டபோது, மின்வேலியில் சிக்கி உயிரிழந்தது. 

இதையடுத்து மின்வேலியில் உயர் அழுத்த மின்சாரம் பாய்ச்சிய விவசாயி மாதேவசாமியை வனத்துறையினர்‌ கைது செய்து சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர். தகவலறிந்த மின்வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்ததில், மின்வேலியில் உயரழுத்த மின்சாரம் பாய்ச்சியதை உறுதி செய்தனர். இதையடுத்து மின்வாரியம் சார்பில் மாதேவசாமி மீது ஆசனூர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.