தமிழ்நாடு

கோவை: ரயில் மீது மோதி காயமடைந்த யானை - சிகிச்சை அளிக்கும் வனத்துறையினர்

கோவை: ரயில் மீது மோதி காயமடைந்த யானை - சிகிச்சை அளிக்கும் வனத்துறையினர்

webteam

கேரளாவில் இருந்து சென்னை வந்த எக்ஸ்பிரஸ் ரயில் மீது மோதி படுகாயமடைந்த யானைக்கு வனத்துறையினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

கோவை சோளக்கரை பகுதியில், திருவனந்தபுரத்திலிருந்து சென்னை நோக்கி வந்த எக்ஸ்பிரஸ் (எண் 02696) ரயில் மீது காட்டு ஆண் யானை ஒன்று மோதி அடிப்பட்டு கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

அதனடிப்படையில் நிகழ்விடத்திற்கு வனத்துறையினர் விரைந்தனர். அங்கு ரயில் மீது மோதிய யானை தண்டவாளத்தில் இருந்து 5 மீட்டர் தொலைவில் காயமடைந்து கிடந்தது.

சோதனை செய்து பார்த்த போது யானைக்கு தலை, கால் மற்றும் பின்பகுதியில் அடிபட்டு இருந்தது. அதனைத்தொடர்ந்து வனத்துறையினர் சம்பவ இடத்திலேயே யானைக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்துள்ளனர்.