தமிழ்நாடு

மீண்டும் விளைநிலங்களுக்குள் புகுந்த சின்னத்தம்பி யானை - விவசாயிகள் கவலை

மீண்டும் விளைநிலங்களுக்குள் புகுந்த சின்னத்தம்பி யானை - விவசாயிகள் கவலை

webteam

பயிர்களை தின்று வரும் சின்னத்தம்பி யானையை வனப்பகுதிக்குள் கொண்டு செல்ல வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கிருஷ்ணாபுரம் பகுதியில் சுற்றித் திரிந்த சின்னத்தம்பி யானை கண்ணாடிபுதூர் என்ற இடத்தில் தஞ்சமடைந்திருந்தது. பின் கிருஷ்ணாபுரம் பகுதியில் கடந்த ஆறு நாட்களாக இருந்த சின்னத்தம்பி யானை நேற்று காலை செங்கழனிபுதூரில் முகாமிட்டது. பின்னர் அங்கிருந்து வெளியேறிய சின்னத்தம்பி யானை விவசாய நிலங்களுக்குள் புகுந்து, நள்ளிரவில் மடத்துக்குளம் அமராவதி ஆற்றைக் கடந்து திண்டுக்கல் மாவட்ட எல்லையான சாமிநாதபுரம் பகுதிக்கு வந்து சேர்ந்தது.

இந்நிலையில் அதிகாலை மீண்டும் அமராவதி ஆற்றுப்படுகைக்கு வந்த சின்னத்தம்பி யானை, அங்கிருந்த தோட்டத்தில் புகுந்து கரும்பு, வாழை போன்றவை சாப்பிட்டு ஒய்வெடுத்தது. நீண்ட நேரம் ஓய்வெடுத்து பின் சின்னத்தம்பி யானை மாலையில் வெளியில் வந்தது. அதோடு, மற்றொரு தோட்டத்தில் புகுந்து பயிர்களை தின்றது. இதனால் சின்னத்தம்பியை வனப்பகுதிக்குள் கொண்டு செல்ல விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். 

சின்னத்தம்பியை விரட்ட உடுமலை மற்றும் அமராவதி வனத்துறை சார்ப்பில் தீவிர முயற்சி செய்தனர். ஆனால் சின்னத்தம்பி எதையும் பொருட்படுத்தாமல் அங்கேயே தஞ்சமடைந்துள்ளது. மேலும் சின்னத்தம்பியின் நடவடிக்கையை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.