தமிழ்நாடு

போராட்டக்களத்தில் மின்வாரிய ஊழியர்கள்!

போராட்டக்களத்தில் மின்வாரிய ஊழியர்கள்!

webteam

பெரியார் நீர்மின் நிலைய கோட்டம் சார்பில் லோயர் கேம்ப்பில் மின்வாரிய ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மின்வாரிய ஊழியர்களின் நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு ஆதரவாக தேனி மாவட்டம் லோயர்ம்கேம்ப் பெரியார் கோட்ட சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் செயற்பொறியாளர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பெரியார், தேக்கடி, சுருளியாறு, ஹைவேவிஸ் மற்றும் வைகை மின்நிலைய உற்பத்தி பிரிவு தொழிலாளர்கள் பங்கேற்றனர். 

இப்போராட்டத்தின் போது, மின் வாரிய ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு, ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்தல், மின்சார வாரியத்தில் காலி பணியிடங்களை வழங்குதல், மின் வாரிய பணியாளர்களுக்கு சம்பளம் மற்றும் ஓய்வூதிய நிலுவை
தொகையை வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. போராட்டம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சிஐடியு மாநில செயற்குழு உறுப்பினர் சந்திரன், வேலை நிறுத்தத்தால் பொதுமக்களின் அத்தியாவசிய தேவையான மின்சாரம் தடை படாமல் இருக்கவும், மின் பழுதுகளை நீக்கவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.