சென்னை பூங்கா ரயில் நிலையத்தில் ரயிலை மறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் சார்பில் தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. சென்னை மெரினா சாலையில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் உள்பட ஏராளமானோர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
இதனிடையே சென்னை பூங்கா ரயில் நிலையத்தில் ரயிலை மறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் அக்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 3 புறநகர் ரயிலை மறித்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சென்னை சென்ட்ரலில் இருந்து தாம்பரம் நோக்கி செல்லும் ரயில் வண்டி சேவையும், தாம்பரத்திலிருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி செல்லும் ரயில் வண்டி சேவையிலும் பாதிக்கப்பட்டுள்ளது.