தமிழ்நாடு

குமரி மாவட்டத்தில் மின் விநியோக சீரமைப்பு பணி மும்முரம்

குமரி மாவட்டத்தில் மின் விநியோக சீரமைப்பு பணி மும்முரம்

webteam

கன்னியாகுமரி மாவட்டத்தில் மின் விநியோகத்தை சீரமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருவதாக மாநில பேரிடர் மீட்பு அமைப்பு தெரிவித்துள்ளது. 

ஒகி புயலால் உருக்குலைந்த கன்னியாகுமரி மாவட்டத்தில் 5ஆயிரத்திற்கும் அதிகமான மின் கம்பங்கள் சாய்ந்துள்ளன. இதன் காரணமாக கடந்த 4 நாட்களாக மின்சாரம் வழங்கப்படவில்லை. சாய்ந்துள்ள மின் கம்பங்களை சரி செய்த பின்பே, மின்சாரம் வழங்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. 

இந்நிலையில் மின் விநியோகத்தை சீரமைக்கும் பணியில் பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டிருப்பதாக மாநில பேரிடர் மீட்பு அமைப்பு தெரிவித்துள்ளது.  இதுதொடர்பான புகைப்படங்களையும் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அந்த அமைப்பு, நிவாரணப் பணிகளில் ஈடுபட்ட ஊழியர்களை ஊக்குவிக்க வேண்டும் என மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.