பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்த உடனேயே தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட சீட் கொடுக்கப்பட்ட மூன்று பேரும், தோல்வியை தழுவியுள்ளனர்.
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய குஷ்பு, பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். இதையடுத்து அவருக்கு சென்னை - ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது.
இதேபோல கர்நாடகாவில் ஐ.பி.எஸ் அதிகாரியாக இருந்த அண்ணாமலை, பதவியை துறந்து, பாஜகவில் இணைந்ததையடுத்து, அவருக்கு அரவக்குறிச்சி தொகுதி ஒதுக்கப்பட்டது. மேலும் திமுக எம்.எல்.ஏ ஆக இருந்த மருத்துவர் சரவணன், பாஜகவில் இணைந்ததும் அவருக்கு மதுரை வடக்கு தொகுதி ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் பாஜகவுக்கு புது வரவான இந்த மூன்று பேரும் தேர்தலில் தோல்வியை தழுவியுள்ளனர்.