தமிழ்நாடு

“தேர்தல் விதிமீறல்”- நடிகை ஸ்ருதிஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக புகார்

Veeramani

கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன் அனுமதியின்றி வாக்குச்சாவடிகளை பார்வையிட்டதால் அவர் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பாஜக தேசிய மகளிரணி தலைவியான வானதி ஸ்ரீனிவாசன் சார்பில் பாஜக மாவட்டத் தலைவர் நந்தகுமார் தெற்கு சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அளித்த புகார் மனுவில், கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி வேட்பாளரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் உடன் அவரது மகளும், நடிகையுமான ஸ்ருதிஹாசன் வாக்குச்சாவடிகளை பார்வையிட்டதாகவும், மாநில சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று கொண்டிருக்கும்போது, வேட்பாளர், அங்கீகரிக்கப்பட்ட ஏஜெண்டுகளை தவிர்த்து வாக்குச்சாவடிகளுக்குள் யாரும் செல்லக்கூடாது என விதிமுறை உள்ள நிலையில், வாக்குப்பதிவு நடந்துக்கொண்டிருந்தபோது ஸ்ருதிஹாசன் அத்துமீறி நுழைந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனவே, ஸ்ருதிஹாசன் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும் புகார் மனுவில் வலியுறுத்தப்பட்டு உள்ளது.