தமிழ்நாடு

தமிழக சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக தேர்தல்? - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பதில்

தமிழக சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக தேர்தல்? - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பதில்

Veeramani

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் ஒரே கட்டமாக நடத்தப்படுமா என்பது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம் அளித்துள்ளார்.

திருச்சியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் ஒரே கட்டமாக நடத்தப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்து பேசிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு “ தமிழகத்தில் அனைத்து அரசியல் கட்சிகளுமே சட்டமன்ற தேர்தலை ஒரே கட்டமாக நடத்தவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர், இது தொடர்பாக தேர்தல் ஆணையம் உரிய முடிவினை எடுக்கும். 80 வயதுக்கு மேல் இருக்கும் வாக்காளர்களுக்கு தபால் வாக்குகள் அளிக்கப்படுகிறது, ஆனால் அது கட்டாயப்படுத்தப்படவில்லை, நேரில் வந்து வாக்கு செலுத்துபவர்கள் செலுத்தலாம்” என தெரிவித்தார்