விஜய் pt
தமிழ்நாடு

தேர்தல் 2026| சென்னை எழும்பூர், டி.நகரில் விஜய் இன்று பரப்புரை!

2026 சட்டமன்ற தேர்தலுக்காக சென்னை எழும்பூர் மற்றும் தியாகராய நகரில் தவெக தலைவர் விஜய் இன்று பரப்புரை மேற்கொள்ள உள்ளார்.

Rishan Vengai

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தனித்து போட்டியிடும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தனது கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். திமுக, அதிமுக-பாஜக, நாதக, தவெக, சசிகலா-ராமதாஸ் கூட்டணி என ஐந்து முனை போட்டி சூடுபிடித்துள்ள நிலையில், இன்று சென்னை தியாகராய்நகர் மற்றும் எழும்பூரில் விஜய்க்கு கடுமையான நிபந்தனைகளுடன் பொதுக்கூட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

2026 சட்டமன்ற தேர்தலானது விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் வருகையால் பரபரப்பான களமாக மாறியுள்ளது. ஒருபக்கம் தொடர்ந்து ஆட்சியை தக்கவைக்கும் முயற்சியில் திமுக, மறுபக்கம் லெகஸியை காப்பாற்றியே ஆகவேண்டிய கட்டாயத்தில் திமுக என பெரும்மோதல் இருந்துவரும் நிலையில், புதியதாக களம்கண்டுள்ள தவெகவிற்கு மக்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் திமுக கூட்டணி, அதிமுக-பாஜக கூட்டணி, நாதக, தவெக, சசிகலா-ராமதாஸ் கூட்டணி என 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் 5 முனை போட்டி நிலவுகிறது.

தவெக தலைவர் விஜய்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 7 நாட்களே உள்ள நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் தொடர் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் விஜய் தொடர்ந்து பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.

எழும்பூர், டி.நகரில் விஜய் இன்று பரப்புரை..

அந்தவகையில் சென்னை எழும்பூர், தியாகராய நகர் பகுதிகளில் தவெக தலைவர் விஜய் இன்று பரப்புரை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

விஜய்

இன்று மாலை 4 முதல் 5 மணி வரை தியாகராய நகரில் விஜய் பரப்புரைக்கு 27 நிபந்தனைகளுடன் அனுமதியும், இன்று மாலை 6 முதல் இரவு 8 மணி வரை எழும்பூரில் பரப்புரை செய்ய 20 நிபந்தனைகளுடனும் விஜய்க்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.