தமிழ்நாடு

முதியவர் தலையில் கல்லை போட்டு கொலை செய்த கும்பல் - தேடுதல் தீவிரம்

முதியவர் தலையில் கல்லை போட்டு கொலை செய்த கும்பல் - தேடுதல் தீவிரம்

Rasus

சிவகாசி அருகே திருத்தங்கலில் 50 வயது முதியவர் தலையில் கல்லை போட்டு படுகொலை செய்துவிட்டு தப்பி ஓடிய கொலையாளிகளை  காவல்துறையினர் தேடி வருகினறனர்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே திருத்தங்கல் சரஸ்வதி நகரில் துரை பாண்டி என்பவருக்கு சொந்தமான பட்டாசு சக்கரம் செய்யும் அட்டை குழாய் கம்பெனி இயங்கி வருகிறது. இங்கு கருப்பையா என்பவர் இரவு காவலாளியாக பணியாற்றி வந்தார். சம்பவத்தன்று கருப்பையா தனது நண்பர்களுடன் ஒன்றாக மது அருந்தியதாக தெரிகிறது.

அப்போது ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த சக நண்பர்கள், கருப்பையாவின் தலையில் கல்லை போட்டு கொலை செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் கொலையாளிகள் அங்கிருந்து தப்பியுள்ளனர். போலீசாரின்  முதல்கட்ட விசாரணையில் இந்தத் தகவல்கள் தெரியவந்துள்ளது. இருப்பினும் போலீசார் தொடர் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே சம்பவம் நடந்த இடத்தை டிஎஸ்பி பிரபாகரன் நேரில் ஆய்வு செய்தார். அத்துடன் சம்பவ நடைபெற்ற இடத்திற்கு மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. தற்போது கொலை செய்யப்பட்ட கருப்பையாவின் உடல், சிவகாசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள திருத்தங்கல் காவல்துறையினர் தப்பி ஓடிய கொலையாளிகளை தேடி வருகின்றனர்.