couple
couple pt desk
தமிழ்நாடு

நாமக்கல்: சிகிச்சைக்கு பணமில்லை– தம்பதியர் எடுத்த விபரீத முடிவு

webteam

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அடுத்துள்ள வரகூர் தாட்கோ காலனியில் வசித்து வந்தவர் பெரியசாமி (55). கூலித் தொழிலாளியான இவருக்கு சாந்தா (52) என்ற மனைவியும், கண்ணதாசன் (28) என்ற மகனும், புனிதா என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில், பெரியசாமியும் அவரது மனைவி சாந்தாவும் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாக தெரிகிறது.

போலீஸ் விசாரணை

இந்நிலையில், உடல்நலம் பாதித்த இருவரும் மாதந்தோறும் அதிகளவு மருத்துவ செலவு செய்து வந்துள்ளனர். இதனால் அதிக கடன் வாங்கி செலவு செய்து வந்த நிலையில், மகனுக்கு பாரமாக இருப்பதாக கருதிய பெரியசாமி, சாந்தா தம்பதியினர், மகன் கண்ணதாசன் வெளியே சென்றிருந்த நேரத்தில் இன்று காலை தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த எருமப்பட்டி காவல்நிலைய போலீசார் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து வழக்குப்பதிவு செய்த எருமப்பட்டி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104 , சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.