புதிய உச்சம் தொட்ட முட்டை விலை web
தமிழ்நாடு

முட்டை விலை உச்சம்| கோழிப்பண்ணை வரலாற்றில் முதல்முறையாக அதிகப்படியான விலை!

முட்டை விலை எப்போதும்போல இல்லாத அளவிற்கு அதிகப்படியான விலை உச்சத்தை தொட்டுள்ளது..

PT WEB

நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில், முட்டை ஒன்றின் பண்ணைக் கொள்முதல் விலை 5 காசுகள் உயர்த்தப்பட்டு, 5 ரூபாய் 95 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது கோழிப் பண்ணை வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அதிகபட்ச உச்ச விலையாகும். கடந்த 12 நாட்களில் மட்டும் 55 காசுகள் விலை உயர்ந்துள்ளது.

முட்டை விலை உயர்வு

கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கிலப் புத்தாண்டை ஒட்டி கேக் தயாரிப்புக்கு அதிக தேவை ஏற்பட்டதாலும், வட மாநிலங்களில் தேவை அதிகரித்ததாலும்தான் இந்தவிலை உயர்வு ஏற்பட்டுள்ளதாகக் கோழிப் பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் சில்லறை விற்பனை கடைகளில் முட்டை விலை 7ரூபாயைத் தொட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.