பொறியியல் கல்லூரிகளில் காலியிடங்கள் அதிகரித்துள்ளதால், புதிய அரசு கல்லூரிகள் தொடங்கப்படாது என்று உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பகழகன் கூறியுள்ளார்.
அதிமுக உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் உசிலம்பட்டி தொகுதியில் பொறியியல் கல்லூரி திறக்கப்படுமா என்று கேள்வி எழுப்பினார். அப்போது பொறியியல் கல்லூரிகளில் காலியிடங்கள் அதிகரித்து வருவதால் புதிய பொறியியல் தற்போது திறக்க வேண்டிய அவசியம் எழவில்லை என்று உயர்கல்வி துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார். கடந்த ஆண்டு 1 லட்சத்து 92 ஆயிரத்து 792 பொறியியல் படிப்புக்கான இடங்களில் 89 ஆயிரத்து 769 இடங்கள் மட்டுமே நிரப்பின என்று அமைச்சர் சுட்டிகாட்டினார்.