தமிழ்நாடு

கல்விக்கடன்: வங்கிகளுக்கு நீதிமன்றம் கேள்வி

கல்விக்கடன்: வங்கிகளுக்கு நீதிமன்றம் கேள்வி

webteam

கல்விக்கடனாக, பயிற்சி மற்றும் புத்தகக் கட்டணத்தை மட்டுமே வழங்க வேண்டும் என வங்கிகளுக்கு யார் அறிவுறுத்தியது என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 

சென்னை உயர்நீதிமன்றத்தில் கல்விக்கடன் குறித்து சந்துரு என்ற மாணவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அதில் பயிற்சி கட்டணம், புத்தகக் கட்டணம் மட்டுமின்றி, நூலகக் கட்டணம், விளையாட்டுக் கட்டணம் எனக் கல்லூரி நிர்ணயித்துள்ள அனைத்து கட்டணங்களையும் கல்விக்கடனாக வழங்க வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.பயிற்சி மற்றும் புத்தகக் கட்டணத்தை மட்டும் கல்விக்கடனாக வழங்க வங்கிகளுக்கு யார் அறிவுறுத்தியது என்றும் எந்தெந்த கட்டணங்களை உள்ளடக்கி கல்விக்கடன் வழங்க வேண்டும் என வங்கிகள் எப்படி நிர்ணயிக்கின்றன என்றும் நீதிபதி ரவிசந்திரபாபு கேள்வி எழுப்பியுள்ளார்.