தமிழ்நாடு

நெல்லை: ஓபிஎஸ், இபிஎஸ் ஒரே வாகனத்தில் பரப்புரை

நெல்லை: ஓபிஎஸ், இபிஎஸ் ஒரே வாகனத்தில் பரப்புரை

webteam

நெல்லை மாவட்டம் கருங்குளத்தில் முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஒரே வாகனத்தில் பரப்புரை மேற்கொண்டனர்.

முன்னாள் சபாநாயகராக இருந்த பி.ஹெச்.பாண்டியனின் மணி மண்டப திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வமும் நெல்லை மாவட்டத்திற்கு வருகை புரிந்தனர். அதற்காக தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வந்த இருவரும் அங்கிருந்து ஒரே வாகனத்தில் 3 மணி அளவில் புறப்பட்டனர்.

<iframe width="640" height="360" src="https://www.youtube.com/embed/4apevOrsD4E" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>

தொடர்ந்து நெல்லை மேலப்பாளையம் அருகே இருக்கக்கூடிய கருங்குளத்தில் திறந்தவெளி வாகனத்தில் முதல்வரும் துணை முதல்வரும் பரப்புரை மேற்கொண்டனர். அங்கு பொதுமக்களும் கட்சி தொண்டர்களும் கொடுத்த வரவேற்பை ஏற்றுக்கொண்டனர்.

ஓபிஎஸ் - இபிஎஸ் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருவதாக கூறப்பட்ட நிலையில், தற்போது இருவரும் ஒரே வாகனத்தில் பரப்புரையில் ஈடுபட்டது கவனம் பெற்றுள்ளது.

தொடர்ந்து பி.ஹெச்.பாண்டியனின் மணிமண்டபத்தை முதலமைச்சர் பழனிசாமியும், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வமும் திறந்து வைத்தனர்.